நீரில் மூழ்கி இளைஞர் பலி


மருதமுனை – பெரியநீலாவணை பகுதியில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் ஓடை ஒன்றில் நீராடச் சென்ற நிலையில் அவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை