நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சில சிறப்பு அங்காடிகளில் போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும் கொழும்பு மரக்கறி சந்தைகளிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன எனவும் நாடு முழுவதும் சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
