திருகோணமலை மாவட்ட ஊடக இல்லம் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மத்திய பஸ் தரிப்பிடத்தில் இந்த ஊடக இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர், சங்கம் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு என்பன இவ்வில்லத்தை நிர்வகிக்க உள்ளன.
மக்களை தெளிவூட்டக்கூடிய முக்கிய ஊடக சந்திப்புக்களை இந்த நிலையத்தில் மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது மாவட்ட அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
ஊடகங்கள் ஒரு நாட்டைப் பொறுத்தவரை முக்கியமான பலம் வாய்ந்த துறையாக காணப்படுகின்றது.
ஊடகங்கள் சரியான தகவல்களை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் வழங்கல் வேண்டும்.
அத்துடன் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படுவதோடு ஒரு தலை பட்சமாக செயற்படுவதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினருடம் காரண காரியங்களை வினவி அந்த செய்திகளை வெளியிடுவது காலத்தின் தேவையாக அமையும்.
மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும்.
பொருத்தமான அணுகு முறைகளை கையாள்வதன் மூலமாக மக்களுடைய பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாக அமையும் என தெரிவித்துள்ளார்.



