தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் மர்மமாக உயிரிழந்த யானைகள்

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ உல்பெத்வெவ பகுதியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் இரு யானைகளின் உடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரு ஆண் யானைகளின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த யானைகளின் உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், அவை மின்சார யானை வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வின விலங்கு ஜீவராசி திணைக்களத்தினர் சென்றதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் யானைகள உயிரிழந்தமை தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை