தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (06) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தக் காற்றுச் சுழற்சியானது ஏற்கனவே கூறப்பட்ட அதே பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 3.1km இற்கு மேலாக உருவாகியுள்ளது.
இது அடுத்த வரும் 48 மணித்தியாலங்களில் தாழமுக்க வளையமாக வலுவடையும்.
ஆனால் எதிர்பார்த்ததை விட இந்தக் காற்றுச் சுழற்சியானது இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி சற்று வேகமாக நெருங்கி வரும்.
இதன் காரணத்தினால் இன்று 07.11.2021 முதல் பெரும்பாலும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
