திருகோணமலையில்-சூரியபுர மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பு போராட்டம் பிரதேச மக்களினால் சூரியபுர பொலிஸ் நிலையத்தின் முன் நடைபெற்றது.

இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு காட்டு யானைகளின் பிரச்சினைகளை கட்டுப்படுத்துமாறு கோரி தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினார்கள்.

இதன் போது பல்வேறு கோரிகைகள் அடங்கிய சுவரொட்டிகளையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.
புதியது பழையவை