யாழ்-வடமராட்சி, கரவெட்டியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
துன்னாலை, ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது - 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று (05)பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்தபோது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
