சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் கவனயீர்ப்புபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ய நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் சர்வதேசமே எமக்கு நீதிபெற்று தர வேண்டும், இலங்கை அரசாங்கம் எம்மை ஏமாற்றுகின்றது நமக்கு இழப்பீடு வேண்டாம், மரணச் சான்றிதழ் வேண்டாம்,ஓ எம் பி வேண்டாம் எமக்கு எமது பிள்ளைகள் மட்டுமே வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.