கல்விப் பொது தராதரப் சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலியூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு அதன் நகல் விண்ணப்பதாரரின் பாதுகாப்பில் காணப்படவேண்டும்’ எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
