கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுக்கிடையிலான ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி ரயில் டிப்பர் வாகனத்துடன் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த ரயில்சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


