முல்லேரியாவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுதிப்படுத்திய காவல்துறை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பலர் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
