அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பீடு!

​2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, இன்று (31.07.2026)இம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.  

​இதற்கமைய, தகுதிபெற்ற பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை தங்களது ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

​பயனாளிகள் தங்களது உரிய வங்கி அட்டைகள் அல்லது கணக்குகள் மூலம் இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதியது பழையவை