யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்குத் தாமே தீ மூட்டித் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (02.08.2026) ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.