டிப்பர் மோதி இளைஞனின் கை துண்டானது!

கிளிநொச்சி ஏ9 வீதி, இரணைமடு சிவன் கோயில் சந்தியில் இன்று (30.09.2026) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், அவரது கை ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.

​ஏ9 வீதியினூடாக பயணித்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்நாசம் சம்பவித்துள்ளது.
​விபத்தில் தீவிர காயங்களுக்குள்ளான இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை