பத்தேகம துப்பாக்கிச்சூடு - காயமடைந்த இருவர் உயிரிழப்பு.!பொலிஸார் தீவிர விசாரணை.!

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27.09.2026) ஆம் திகதி காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த நபர்களை இலக்கு வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
.
​இச்சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை