சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் விடுதலை பெறக் கோரி களுதாவளையில் கண்ணீர் மல்க கவனயீர்ப்பு..!

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்பவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் மட்டக்களப்பு களுதாவளையில் இன்று (27.09.2026) ஆம் திகதி உணர்ச்சிப்பூர்வமான கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

​களுதாவளை முச்சக்கர வண்டிச் சங்கத்தின் ஏற்பாட்டில், களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலை முன்றலில் இப்போராட்டம் நடைபெற்றது.

​இப் போராட்டத்தில் முச்சக்கர வண்டிச் சங்க உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினர், உள்ளூர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கண்ணீர் மல்கக் கலந்துகொண்டனர்.

​போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனோஜனின் வழக்கினை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும், அவருக்கு உரிய நீதியை வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

​முச்சக்கர வண்டிச் சங்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கண்டனப் போராட்டம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதியது பழையவை