கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹாவத்தப் பகுதியில் அமைந்துள்ள வரிசை வீடுகளில் இன்று (13.10.2026) ஆம் திகதி திடீரெனப் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள சுமார் 25 வீடுகள் இந்த கோர விபத்தினால் முழுமையாகவும் பகுதியளவிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
தீ விபத்து குறித்து உடனடியாகக் கிடைத்த தகவலை அடுத்து, களமிறக்கப்பட்ட 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான முழுமையான காரணம் மற்றும் காயங்கள் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.