எதிர்க்கட்சித் தலைவரும், வடகிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்க கங்கணம் கட்டி செயல்படுபவரும் கடந்த ஜனாதிபதிதேர்தலில் பதில் பதவி அணி வடகிழக்கில் ஆதரித்தவருமான சஜித்பிரமதாசா பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் பிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
மத பாரம்பரியங்களையும் பௌத்த பிக்குகளின் காவியுடையின் கௌரவத்தையும் அரசாங்கம் மதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இரவு தூங்க வில்லை எனவும் தெரிகிறது.
அவர் வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்றங்கள் சட்ட வரம்புக்குள் இயங்குகின்றன என்றும், அந்த வரம்புகளை மீறிச் செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார். எனினும், அரசாங்கங்களும் சமூக மரபுகள், நடைமுறைகள் மற்றும் கலாசார அடையாளங்களை கருத்தில் கொண்டு உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ஞானசார தேரர் அவருடைய சம்மதமின்றி சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.
நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பேணும் வகையில் பிரதிவாதிகள் பொருத்தமான சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், ஒரு பௌத்த பிக்குவையோ அல்லது வேறு மதத் தலைவரையோ அவர்களின் சம்மதமின்றி அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மத நிறுவனத்தின் அறிவின்றி சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வருவது பொருத்தமற்றது எனவும்
ஒருவர் பௌத்த பிக்குவாகத் தொடர்கிறாரா அல்லது வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரின் அதிகாரப்பூர்வ மதப் பதவி தொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட மத நிறுவனத்தினாலேயே எடுக்கப்பட வேண்டும் என்றும்.
இத்தகைய உணர்வுபூர்வமான விடயங்கள், மூன்று பௌத்த நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்களின் அறிவும் ஒப்புதலும் பெற்றே கையாளப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய விடயங்களில், சம்பந்தப்பட்ட மதத் தலைமைத்துவத்தின் அறிவும் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .