திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

​திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர், சிறைச்சாலை வளாகத்தில் வைத்தே லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

​சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை