மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.!

கால்நடைப்பண்ணையாளர்கள், விவசாயிகள் என பலரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மட்டக்களப்பு கச்சேரி முன்பாக எதிர்வருகின்ற 2026.11.02 ஆம் திகதி காலை 10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். 

இதில் அனைவரையும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (30/10/2026) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போது மேலும் குறிப்பிடுகையில்.

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை ஆகிய மேச்சர்தரைப் பிரதேசத்தில் யுத்தத்துக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அம்பாறை மட்டும் பொலன்நறுவை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் மேச்சல் தரைகளில் கால்நடைகளை பராமரிக்க முடியாத அளவிற்கு அத்துமீறிய வேலைகளை செய்து வருகின்றார்கள்.

அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டியது அரசின் கடமை இதற்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டதே எதிர்வரும் திங்கள்கிழமை 02/10/2026, மு.ப:10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் எனவும் அனைத்து மக்களும் அன்றைய தினம் இதற்காக செலவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

புதியது பழையவை