கலேவெல – தம்புள்ளை வீதியில் டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து.!

கலேவெல – தம்புள்ளை பிரதான வீதியில் அமைந்துள்ள கருப்பு பாலத்திலிருந்து டிப்பர் வாகனம் ஒன்று இன்று (28.10.2026) அதிகாலை கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த சாரதி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை