மட்டக்களப்பு, கிரான்குளம் தர்மபுரம் கடற்கரைப் பகுதியில் மீனவர்களின் வலையில் சுமார் 200 கிலோகிராம் எடையுடைய பாரிய கொப்பரா மீன் ஒன்று சிக்கியுள்ளது.
கடந்த 01.11.2026 ஆம் திகதி மாலை மீனவர்களின் வலையில் சிக்கிய இந்தப் பாரிய மீன், 252,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு கிலோகிராம் கொப்பரா மீன் சுமார் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தைக்கு அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது ஒரு கிலோகிராம் கொப்பரா மீன் சுமார் 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வாறான பாரிய மீன் ஒன்று தமது வலையில் சிக்கியமை மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடித் தொழிலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மீனவர்களுக்கு, இந்தப் பாரிய கொப்பரா மீன் கிடைத்தமை மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.