இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்! இன்று முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலைகள் இன்று (01.11.2026) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருத்தியமைக்கப்பட்ட புதிய எரிபொருள் விலைகளின் விபரங்கள் வருமாறு.

🔹 லங்கா டீசல்: லீற்றருக்கு 5 ரூபா அதிகரிக்கப்பட்டு, 397 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை – 392 ரூபா)

🔹 லங்கா சுப்பர் டீசல்: லீற்றருக்கு 15 ரூபா அதிகரிக்கப்பட்டு, 543 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை – 528 ரூபா)

🔹 பெட்ரோல் 92 ஒக்டேன்: லீற்றருக்கு 10 ரூபா அதிகரிக்கப்பட்டு, 424 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை – 414 ரூபா)

🔹 பெட்ரோல் 95 ஒக்டேன்: லீற்றருக்கு 15 ரூபா அதிகரிக்கப்பட்டு, 490 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை – 475 ரூபா)

🔹 மண்ணெண்ணெய்: விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு லீற்றர் 285 ரூபாவாகவே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும்.

எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு வாகனப் பாவனையாளர்கள், போக்குவரத்துத் துறையினர் மற்றும் பொதுமக்களின் அன்றாட செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியது பழையவை