திருகோணமலையில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு.!

திருகோணமலை, சீனத் துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (02.11.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

கப்பல்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

புதியது பழையவை