மேலும் தனது கருத்தில்
சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.காத்தான்குடி பகுதியில் குழப்பவாதியாக இருந்த சஹ்ரானுக்கு கைகொடுத்து தேர்தல்காலங்களில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்ததை நாம் கண்டிருந்தோம்.
அவ்வாறு பிழைகளை செய்து விட்டு கூலிக்கு செயற்பட்ட சஹ்ரான் குழு உருவாகுவதற்கு சமூகம் உள்ளவர்கள் தான் காரணம் என கருத்துக்களை அவர் பரப்புவதை ஏற்கமுடியாது.இவரது பேச்சுக்களை பார்க்கின்ற போது அவருக்கு சரியான விளக்கங்கள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.வழமையாகவே ரவூப் ஹக்கீம் பேசுகின்ற போது என்ன பேசுகின்றார் என்பது யாருக்கும் புரியாது என்றார்