போலித் தகவல்களை பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை



இணையத்தளங்களில் போலித் தகவல்களை பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சட்டமூலம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது இணைய மோசடி மற்றும் தவறான நடத்தை பாதுகாப்பு சட்டமூலம் என அழைக்கப்படுகிறது. அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசங்களின் பாதுகாப்பு, பொது சுகாதாரம், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது பிற நாடுகளுடன் அரசாங்கம் வைத்திருக்கும் நட்பு உறவுகள் குறித்து பல்வேறு குழுக்களிடையே விரோதம், வெறுப்பு அல்லது வெறுப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்கான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதற்கமைய, இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பும் போலி கணக்குகளை செயலிழக்கச் செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்பும் வலைத்தளங்களின் இலாபத்தை குறைப்பதற்கும், டிஜிட்டல் விளம்பரத்தின் வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதற்கும், இணைய வேகத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை