நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நாளை(31) அதிகாலை 4 மணியுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற தேசிய கொவிட் செயலணியின் சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
சாதாரண நிலைமையின் கீழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
