குருநாகல் − நாரம்மல வென்னறுவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த மண்சரிவு ஏற்படும் சந்தர்ப்பத்தில் வீட்டில், தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மகள் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த மண்சரிவில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.