கிளாஸ்கோவில் இருந்த காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாயவின் வாகனத்தை மறித்து தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இனை இன்று அதிகாலை முதல் சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹொட்டேலில் இருந்து காரில் புறப்பட்ட சிறிலங்கா அரசதலைவரின் வாகனத்தை இடைமறித்து கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர் ஆர்பாட்டக்காரர்கள்.

