சமையல் எரிவாயு வெடிப்பினால் யுவதி பலி

இலங்கையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறும் சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி திம்புலாகல பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.

எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை