அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற தீபாவளிப் பண்டிகை

நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்றுப் பரவலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்பாகா இடம்பெற்றது.

சிறப்புமிகு இந்த நிகழ்வினை பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும் அவரது பாரியார் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் விசேட அம்சமாக , பிரதமரினால் நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன
இலங்கைத் திருநாட்டின் சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக இச் சிறப்பு மிகு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


புதியது பழையவை