மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் காணியில்லாத அனைத்து மக்களுக்கும் காணிகளைப்பெற்றுக்கொடுப்பதற்கான விரிவான செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு 01ஆம் குறுக்கு வீதி தொடக்கம் 10ஆம் குறுக்கு வீதிவரையான பகுதிகளை கொங்கிரிட் இட்டு புனரமைப்பு செய்து திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் படி 100,000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 21மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியலாளர் ச.துஸ்யந்தன்,ஒப்பந்தகாரர் ரவீந்திரமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.