கொவிட் மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவர ஜனாதிபதி ஆலோசனை

கொவிட் நோயாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை நாட்டுக்கு இறக்குமதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசிகளை கொண்டுவந்தது போன்றே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
புதியது பழையவை