காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்-முக்கிய உலக பாதாளக்குழு உறுப்பினர் பலி

முக்கிய உலக பாதாளக்குழு உறுப்பினர் ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று(26) அதிகாலை களுத்துறை -தியகம பகுதியில் காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் இரு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக்குழு உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை