திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சிறிய ரக கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (30-12-2021) வியாழக்கிழமை மாலை தோப்பூரில் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் – தயிர்வாடி வளைவுப் பகுதியில் குறித்த சிறக ரக கெப் வாகனம் பயணித்துக்கொண்டிருந்த வேளை பாதையைவிட்டு விளகி தலைகீழாக பிரண்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் கெப் வாகனத்தின் வாகனச் சாரதியும், உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி மீனை ஏற்றிக் கொண்டு பயணித்த கெப் வண்டியே இவ் விபத்தை எதிர்நோக்கியுள்ளது.