அமைச்சரவையில் விரிவாக ஆராய்வு
ஊழியர் சேமலாப நிதியிலிருந்து வரி அறவிடுவது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் நேற்று அமைச்சரவையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியியும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மேற்படி வரி அறவிடலுக்கு எதிராக வர்த்தக வளையத்தின் ஊழியர்கள் தேசிய மத்திய நிலையம் அதன் கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.
மோசமான பொருளாதார நிலை காரணமாகவே மேற்படி வரியை அறவிடுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
