யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் நேற்று(10) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை காரைநகரிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற கப் ரக வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பதுளையில் இருந்து யாழிற்கு வந்திருந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

