நாளைய தினம் (17) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும்:
- மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 மணி வரை 2 மணி நேரம்
- பி.ப. 5.00 முதல் இரவு 10.00 மணி வரை 1 1⁄4மணி நேரம்
P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 2 மணித்தியாலம் மாத்திரம்:
- பி.ப. 3.00 முதல் இரவு 11.00 வரை 2 மணி நேரம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
