மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை) 208 ஆவது ஆண்டு நிறைவு விழா


(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை) 208 ஆவது கல்லூரிதினம் மிக எளிமையான முறையில்
இடம்பெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை) 208 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று புதன்கிழமை (29)காலை 8.30 கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதப்பெரியார்களான மட்டு.புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு வண.ஏ.சாம் சுபேந்திரன்,நாவட்குடா மெதடிஸ்த திருச்சபைக்குரு வண.எஸ்.முருகுப்பிள்ளை,
கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.ஜீ.அருளானந்தம்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எந்திரி வை.கோபிநாத்,பிரதியதிபர் எஸ்.நந்தகோபால்,
பழைய மாணவர் சங்கத்தலைவர் எஸ்.பகீரதன்,குருளைச்சாரண தலைவர் ந.பிரதீபன்,ஆசிரியர்கள்,குருளைச்சாரண ஆசிரியர்கள்,மாணவர்கள்,சாரண மாணவர்கள், கலந்துகொண்டார்கள்.

இலங்கை திருநாட்டின் முதற்கல்லூரியும்,மட்டக்களப்பின் முதன்மை கல்லூரியாகவும், எட்டுத்திக்கும் பூத்துக் குழுங்கி மணம் பரப்பி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி  பொலிவுபெற்று,ஆயிரக்கணக்கான மாணவர்களையும்,நூற்றுக்கணக்கான வைத்தியர்களையும்,பொறியியலாளர்களையும்,இன்னும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கியதுடன் இன்றுடன் 208 ஆவது ஆண்டு நிறைவில் நன்றியோடு காலடி பதிக்கும் இவ்வேளையில் மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் நன்றி செலுத்தும் வழிபாட்டு ஆராதணை நிகழ்வுகள், இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்காவில் உள்ள கல்லூரியின் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிலைக்கு வர்ண பூமாலை அணிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டமை விஷேட அம்சமாகும்.
புதியது பழையவை