உலகில் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 90ஆவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை 13 இடங்கள் முன்னேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகள் முதல் 5 நாடுகளுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
உலகில் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளதுடன் 71 நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
அத்துடன் அமைதியான நாடுகள் பட்டியலில் அவுஸ்திரேலியா இந்த ஆண்டு 27வது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
