யாழ்ப்பாணம் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து நேற்றைய தினம் இரவு (21-10-2022) குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த போது இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

