மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் ஆபத்துள்ளது பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் இது போன்ற பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, நிலாந்தன் ,கிருஷ்ணா போன்றவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது ஊடக கடமையை செய்து வருகின்றனர்.

இன்றும் அந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தப்பட்டு கொண்டு வருவதுடன் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்தும் உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு இந்த நிலை என்றால் எங்களுக்கும் பயமாக இருக்கின்றது காரணம் நாங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் .

கோத்தபாஜவுடன் சேர்ந்து இயங்கிய ட்ரிபிளி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்று பயம் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை