நீர்கொழும்பு மசாஜ் நிலையமொன்றுக்கு 15 வயதான சிறுமியை அழைத்துச் சென்று பாலியல துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் 17 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையை சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
17 வயது யுவதி , சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரான யுவதி சிறுமியை ரயில் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அது தொடர்பில் சிறுமி , யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமி ,பொலிஸ் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் யுவதியைக் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.