வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்



பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள்  நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க அரபு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் சராசரியாக 200 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது  அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் குறைந்தது 25 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலை பெற்றுக் கொள்வதற்கான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தரவுகள் காட்டுவதால் இன்னும் பலர் அவர்களை பின்பற்ற வாய்ப்புள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது ஓமான் நாடுகளில் வைத்திய துறையில் ஈடுபட வைத்தியர்களுக்கான பிரத்தியேகமான பரீட்சைக்கு தோற்ற வேண்டும். 

இங்கிலாந்தில் வைத்திய துறையில் ஈடுபட தொழில்முறை மற்றும் மொழியியல் மதிப்பீட்டு குழுமத்தின் பரீட்சைக்கு தோற்றவேண்டும். அவுஸ்திரேலியாவில் அவர்கள் அவுஸ்திரேலிய மருத்துவ சபையின் பரீட்சைக்கு தோற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை