மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!



பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டின் பின்புறம் அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இலக்கானார்.

அதேநேரம், அவரது சகோதரரும் மின்னல் தாக்கி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தந்தைக்கு காயம் ஏற்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை