சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15-06-2025) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தரவுள்ள கீதா கோபிநாத் ”நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
