திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை இன்று (30.08.2025) காலை இடம்பெற்றுள்ளது.
தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
வயலுக்கு இரவு வேளையில் காவலுக்குச் சென்று காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிக்குள் மறைந்திருந்த யானை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.