தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தொற்றா நோய் சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வு ஓன்று இன்று (11.09.2025)ஆம் திகதி வியாழக்கிழமை போரதீவுபற்று கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
உத்தியோகத்தர்களின் நடைபயிற்சி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி பொறுகாமம் வரை சென்று மீண்டும் போரதீவுபற்று கலாசார மண்டபம் வரை நிறைவு பெற்றதுடன் உடற்பயிற்சி நிகழ்வும் ஒன்றும் இதன் போது இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் தொற்றா நோய் சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு என்பனவும் இடம் பெற்றது.