கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதிப்பு.!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, கோவில்போரதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் திருச்சடங்கு பெருவிழாவின்  தீமிதிப்பு (பூ மிதிப்பு) வைபவம் இன்று (30.05.2026) சனிக்கிழமை அதிகாலை மிக விமசையாக நடைபெற்றது.

​இவ் ஆலயத்தின் உற்சவ திருச்சடங்கானது  கடந்த (23.05.2026)ஆம் திகதி ஆரம்பமாகின.

பல நாட்கள் கடுமையான விரதமிருந்து காப்புக்கட்டிய பெருமளவிலான பக்தர்கள், ஆலய முன்றலில் திரண்டு அம்மனை வழிப்பட்டனர்.

​உற்சவத்தின் முக்கிய அங்கமான தீ மூட்டும் நிகழ்வு நேற்று (29.05.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விரதமிருந்த  பக்தர்கள் "அம்மா... தாயே..." என்ற பக்தி கோஷங்களை எழுப்ப, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்திற்கு முறைப்படி தீ மூட்டப்பட்டது.

​அதனைத் தொடர்ந்து, இன்று(30.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பக்திபூர்வமாக எரியும் அக்னி குண்டத்தில் இறங்கி, அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

​நாளை (31.05.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்மாளின் பாரம்பரிய திருக்குளித்தி (குளிர்ச்சி) நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் மட்டக்களப்பு மற்றும் அதன் நாற்புறங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்று வருகின்றனர்.
புதியது பழையவை