மாத்தறை, தலல்ல - பெலிவத்த பகுதியில் இன்று (26.6.2026) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலேயே, மற்றுமொரு வேன் விபத்தொன்று பதிவாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேனின் அதிவேகம் அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் வென்னப்புவை பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உள்ளூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.